பொங்கல் பரிசுரேஷன் அட்டைதார்ர்களுக்கு அரசின் சார்பில் பொங்கல் பரிசுடன் பொங்கல் பொருட்கள் வழங்கப்படும்.

 🎁👉பொங்கல் பரிசு அறிவித்த முதல்வர்; சென்னையில் டோக்கன் விநியோகிக்கும் பணி தொடக்கம் மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும், ரேஷன் அட்டைதார்ர்களுக்கு அரசின் சார்பில் பொங்கல் பரிசுடன் பொங்கல் பொருட்கள் வழங்கப்படும். 😀


🤔பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ3000 வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனை வழங்கும் வகையில் டேக்கன் விநியோகிக்கும் பணி தொடங்கியுள்ளது. 

✍️ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15-ந் தேதி முதல் 3 நாட்கள் தமிழர் திருநாளான பொங்கல் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் விமர்சையாக கொண்டாடும் இந்த பண்டிகைக்காக வெளியூரில் இருப்பவர்கள், தங்கள் சொந்த ஊருக்கு திரும்புவது வழக்கம். அதேபோல் மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும், ரேஷன் அட்டைதார்ர்களுக்கு அரசின் சார்பில் பொங்கல் பரிசுடன் பொங்கல் பொருட்கள் வழங்கப்படும். 

🙏இதில் ஒருசில வருடங்கள் பொங்கல் பரிசு இல்லை என்றாலும் பொங்கல் பொருட்கள் ஆண்டுதோறும் தவறாமல் வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பரிசுத்தொகை மற்றும் பொருட்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி ஒவ்வொரு ரேஷன் அட்டைதார்ர்களுக்கும் ரூ3000 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் இதனுடன் பொங்கல் வைக்க தேவையான அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.  

பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசு உடன் மூவாயிரம் ரூபாய் ரொக்கமும் வழங்கப்படும் என்ற அறிவிப்பு மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில, இந்த பொங்கல் பரிசை சுமூகமாக விநியோகிக்க வழக்கமான டோக்கன் முறை கடைபிடிக்கப்படுகிறது. தற்போது டோக்கன் முறையில் பொங்கல் பரிசு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 🎁

அதன்படி தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசுக்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணி தொடங்கியது. ஊழியர்கள் சென்னையில் வீடு, வீடாக சென்று பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த டோக்கனில் பொங்கல் பரிசு தொகை பெறும் நேரம், தேதியுடன் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி, நேரத்தில் சென்று பொங்கல் பரிசை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.👆

Comments

Popular posts from this blog

Traditional, Digital, and Relationship Marketing A Complete Guide for Businesses balanced strategy combining all three approaches growth and success.

Here’s a comprehensive breakdown of the responsibilities of a business, Economic Responsibility, Ethical Responsibility and Environmental Responsibility

Safety Officer in the Workplace: Role & Importance ,Critical Role of a Training, Education & Emergency Preparedness